இவர் தான் சிறந்த டெத் பவுலர் - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!

Updated: Tue, May 17 2022 16:56 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனில் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். பும்ரா, ஷமி, ஹர்ஷல் படேல், உமேஷ் யாதவ் ஆகிய சீனியர் பவுலர்களுடன், இளம் பவுலர்களான உம்ரான் மாலிக், மோசின் கான், யஷ் தயால், முகேஷ் சௌத்ரி, அர்ஷ்தீப் சிங், சிமர்ஜீத் சிங் ஆகிய இளம் பவுலர்கள் அருமையாக பந்துவீசிவருகின்றனர்.

இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ஃபாஸ்ட் பவுலர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ஆர்சிபி அணியில் ஆடிவரும் ஹர்ஷல் படேலை சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார். கடந்த சீசனில் ஆர்சிபிக்காக அபாரமாக பந்துவீசி கடந்த சீசனில் அதிகமான விக்கெட்டுகளை(32 விக்கெட்) வீழ்த்திய ஹர்ஷல் படேலை, இந்த சீசனுக்கான ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்சிபிஅணி. கடந்த சீசனில் சிறப்பாக பந்துவீசியதன் விளைவாக, இந்திய அணியிலும் இடம்பிடித்தார். 

இந்த சீசனிலும் ஹர்ஷல் படேல் அருமையாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்திவருகிறார். நல்ல வேரியேஷனில் பந்துவீசும் ஹர்ஷல் படேலின் பவுலிங், எதிரணி வீரர்களுக்கு அடித்து ஆட கடும் சவாலாக உள்ளது. இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஹர்ஷல் படேல்.
 
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதற்கு காரணம் பஞ்சாப் அணி 209 ரன்களை குவித்ததுதான். பஞ்சாப் அணி 209 ரன்களை குவித்தபோதிலும் ஹர்ஷல் படேல் அருமையாக பந்துவீசி 4 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். அவரது சிறப்பான பந்துவீச்சால் தான் 209 ரன்களுக்காவது பஞ்சாப்பை கட்டுப்படுத்த முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேநேரத்தில் சச்சின் டெண்டுல்கரும் அந்த பொறுப்பில் உத்வேகத்தோடு செயல்பட தவறிவிட்டார். மேலும் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த அவர் விரும்பிக் கொண்டிருந்தார். இதன் காரணமாக மகிழ்ச்சியோடு கேப்டன் பதவியை துறந்தார். மீண்டும் கேப்டன் பதவி தன்னை தேடி வந்தபோது வேண்டாம் என்று சொன்னவர் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஷி தரூர்

அந்த போட்டிக்கு பின் ஹர்ஷல் படேல் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், “ஹர்ஷல் படேலின் பவுலிங்கால் தான் 209 ரன்களுக்காவது பஞ்சாப்பை கட்டுப்படுத்த முடிந்தது. ஒவ்வொரு போட்டியிலும் ஹர்ஷலின் பவுலிங் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. நல்ல வேரியேஷனுடன் அருமையாக பந்துவீசிவருகிறார். இந்தியாவின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஹர்ஷல் படேல். குறிப்பாக மிகச்சிறந்த டெத் பவுலர்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை