ஸ்காட்லாந்து vs அயர்லாந்து, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Oct 19 2022 06:29 IST
Image Source: Google

எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுவிப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நாளை (அக்.19) இரண்டு லீக் ஆட்டங்கள் ஹாபர்ட்டில் நடக்கின்றன. 

இதில் காலை 9.30 மணிக்கு தொடக்கும் 7ஆவது போட்டியில் ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியுடன், ஆண்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்துகிறது. 

இத்தொடரில் ஸ்காட்லாந்து அணி ஏற்கெனவே வலிமை வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. அதிலும் அந்த அணி பேட்டிங், பவுலிங் என இரு பிரிவிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

அந்த அணியின் பேட்டிங்கில் ஜார்ஜ் முன்ஸி, மேத்யூ கிராஸ், பெர்ரிங்டன், மெக்லீட் போன்றோரும் பந்துவீச்சில் மார்க் வாட், பிராட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 

அதேசமயம் மறுபக்கம் அயர்லாந்து அணி முதல் போட்டியிலேயே ஜிம்பாப்வேவுடன் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த அணியில் பால் ஸ்டிர்லிங், பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்த பட்சத்திலும் அந்த அணி தோல்வியைத் தழுவியது.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தமட்டில் மார்க் அதிர், ஜோஷுவா லிட்ட, சிமி சிங், கர்டிஸ் காம்பெர் ஆகியோர் வழுசேர்க்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இரு அணிகளும் இதுவரை எந்தவொரு டி20 போட்டிகளிலும் விளையாடமல் இருப்பதால், முதல் வெற்றியைப் பதிவுசெய்யம் அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஸ்காட்லாந்து vs அயர்லாந்து
  • இடம் - ஓவல் மைதானம், ஹாபர்ட்
  • நேரம் - காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)

உத்தேச அணி 

அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், ஜார்ஜ் டோக்ரெல், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, மார்க் அடேர், சிமி சிங், பேரி மெக்கார்த்தி, ஜோஷுவா லிட்டில்
    
ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ், மேத்யூ கிராஸ், ரிச்சி பெர்ரிங்டன்(கே), கலம் மேக்லியோட், கிறிஸ் கிரீவ்ஸ், மைக்கேல் லீஸ்க், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃப்யான் ஷெரீப், பிராட் வீல்

ஃபெண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - லோர்கன் டக்கர்
  •      பேட்டர்ஸ் - பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், ஜார்ஜ் முன்சி, கலம் மேக்லியோட்
  •      ஆல்-ரவுண்டர்கள் - மைக்கேல் லீஸ்க், கரேத் டெலானி
  •      பந்துவீச்சாளர்கள் - மார்க் அடேர், ஜோஷ் லிட்டில், மார்க் வாட், பிராட் வீல்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை