SL vs SA: ஜென்மேன் மாலன் அபார சதம்; இலங்கைக்கு 284 டார்கெட்!
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது. மழைக்காரணமாக ஒருமணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற தென் அப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மேலும் இப்போட்டி 47 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஜென்மேன் மாலன் - ஐடன் மார்க்ரம் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த மார்க்ரம் 21 ரன்களில் வெளியேறினார்.
பின் மாலனுடன் ரீச ஹெண்ட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்து விளையாடினார். இந்த இணை அரைசதம் கடந்ததுடன், பார்ட்னர்ஷிப் முறையில் 96 ரன்களைச் சேர்த்தது. பின்னர் 51 ரன்களுடன் ஹெண்ட்ரிக்ஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வென்டர் டவுசன் 16 ரன்களில் நடையைக் கட்டினார்.
இருப்பினும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜென்மேன் மாலன் சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவருடன் இணைந்து விளையாடிய ஹென்ரிச் கிளானும் தனது பங்கிற்கு 43 ரன்களைச் சேர்த்தார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதன்மூலம் 47 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜென்மேன் மாலன் 121 ரன்களை எடுத்தார். இலங்கை அணி தரப்பில் துஷ்மந்தா சமீரா, கருணரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.