ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Australia vs India 2nd ODI Match Prediction: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சி செய்யும். அதேசமயம் ஷுப்மன் கில் தலைமையில் முதல் முறையாக ஒருநாள் தொடரை எதிர்கொண்டுள்ள இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AUS vs IND 2nd ODI: போட்டி தகவல்கள்
மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
இடம் - அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானம், அடிலெய்ட்
நேரம் - காலை 9 மணி
Adelaide Oval, Adelaide Pitch Report
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 94 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 49 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 43 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 225 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 369 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது
AUS vs IND ODI Head To Head Record
மோதிய போட்டிகள்- 153
இந்தியா- 58
ஆஸ்திரேலியா- 85
முடிவில்லை- 10
AUS vs IND 2nd ODI : Where to Watch?
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.
AUS vs IND 2nd ODI: Player to Watch Out For
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்திய அணியைப் பொறுத்தவரை, விராட் கோலி, கே.எல். ராகுல் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தங்கள் செயல்திறன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கலாம்.
Australia vs India 2nd ODI Probable Playing XI
Australia 2nd ODI Probable Playing XI: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜோஷ் பிலிப், மேட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி, மிட்செல் ஓவன், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னேமன், ஜோஷ் ஹேசில்வுட்.
India 2nd ODI Probable Playing XI: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
Australia vs India Today's Match Prediction
ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.
Also Read: LIVE Cricket Score
AUS vs IND 2nd ODI Match Prediction, AUS vs IND Pitch Report, Today's Match AUS vs IND, AUS vs IND Prediction, AUS vs IND Predicted XIs, Cricket Tips, AUS vs IND Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs India