Reeza hendricks
எஸ்ஏ20 2025: ஹென்றிக்ஸ், பிரீவிஸ் அதிரடியில் கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது எம்ஐ கேப்டவுன்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரியான் ரிக்கெல்டன் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 30 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய காலின் இங்ராமும் 16 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Reeza hendricks
-
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன் அதிரடியில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: ரீஸா ஹென்றிக்ஸ் அரைசதம்; பார்ல் ராயல்ஸுக்கு 173 டார்கெட்!
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs PAK, 2nd T20I: சதமடித்து சாதனை படைத்த ரீஸா ஹென்றிக்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை ரீஸா ஹென்ட்ரிக்ஸ் படைத்துள்ளார். ...
-
SA vs PAK, 2nd T20I: சதமடித்து அசத்திய ஹென்றிக்ஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
IRE vs SA: கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து டெம்பா பவுமா விலகல்; ஹென்றிஸுக்கு வாய்ப்பு!
அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளர். ...
-
IRE vs SA, 1st T20I: ரிக்கெல்டன், ஹென்றிக்ஸ் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் ரீஸா ஹென்றிக்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
LPL 2024: பெரேரா, ஹென்றிக்ஸ் அதிரடியில் தம்புளா சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி!
Lanka Premier League 2024: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட ஜஸ்பிரித் பும்ரா - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஹென்றிக்ஸின் விக்கெட்டை தட்டித்தூக்கிய வான் பீக் - காணொளி!
தென் ஆப்பிரிக்க அணி வீரர் ரீஸா ஹென்றிக்ஸின் விக்கெட்டை நெதர்லாந்து வீரர் லோகன் வான் பீக் கைப்பற்றிய காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
WI vs SA, 1st T20I: ஹென்றிக்ஸ் போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: ரிஸ்வான், ஹென்றிக்ஸ் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24