SL vs SA: மார்க்ரம் அதிரடியால் இலங்கைக்கு 164 ரன்கள் இலக்கு!

Updated: Fri, Sep 10 2021 20:46 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் - ரீசா ஹெண்ட்ரிக்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். 

பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டி காக் 36 ரன்களிலு, ஹெண்ட்ரிக்ஸ் 38 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

அடுத்துவந்த ஐடன் மார்க்ரம் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும், கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட தொடங்கினார். ஆனால் 48 ரன்களில் அவரும் ஆட்டமிழந்து நூழிலையில் அரசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை