இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
ஆஸ்திரேலியா vs இந்தியா முதல் டி20: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 3 போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை கான்பெர்ராவில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், தனது பிளேயிங் லெவனை கணித்துள்ளார். இதுகுறித்த காணொளியானது வைரலாகியும் வருகிறது.
அதன்படி அவர் தேர்வு செய்திருக்கும் அணியில் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில், அபிஷேக் சார்மாவை தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். அதேசமயம் மூன்றாவது மற்றும் நான்காம் இடங்களுக்கு சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ள அவர், அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுத்துள்ளார். இதனால் துருவ் ஜூரெலுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை.
மேலும் அவர், அக்ஸர் படேல் மற்றும் ஷிவம் துபே ஆகியோரை ஆல்ரவுண்டர்களாகவும், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர்களாகவும், வருண் சக்ரவர்த்தியை சுழற்பந்து வீச்சாளராகவும் தேர்வு செய்துள்ளார். அதேசமயம் அவர் தனது அணியில் குல்தீப் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு தனது அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இர்ஃபான் பதான் தேர்வு செய்த இந்தியா பிளேயிங் லெவன்: ஷுப்மான் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
Also Read: LIVE Cricket Score
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷிதீப் சிங், சங்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், பும்ரா. (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.