ஆஸ்திரேலிய தொடருக்கான தற்காலிக அணியை அறிவித்தது இலங்கை!
ஆஸ்திரேலிய அணி அடுத்தமாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் ஜூம் 7ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான இலங்கையின் தற்காலிக அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் அணிக்கு திமுத் கருணரத்னேவும், ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு தசுன் ஷானகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக பாட் கம்மின்ஸும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு ஆரோன் ஃபிஞ்சும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தற்காலிக டெஸ்ட் அணி: திமுத் கருணாரத்ன (கே), பதும் நிஷங்க, கமில் மிஷாரா, ஓஷத ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, தினேஷ் சண்டிமால், சாமிக்க கருணாரத்ன, ரமேஷ் மெண்டிஸ், மொஹமட் ஷிராஸ், ஷிரான் ஃபெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, அசித்த ஃபெர்னாண்டோ, ஜெப்ரி வான்டர்சே, லக்ஷித ரசாஞ்சன, பிரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய, சுமின்த லக்ஷேன்.
இலங்கை தற்காலிக ஒருநாள் அணி: தசுன் ஷனக (கே), தனுஷ்க குணதிலக்க, பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தனஞ்சய டி சில்வா, அஷேன் பண்டார, தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்லா, ஜனித் லியனகே, துனித் வெல்லலகே, தனஞ்சய லக்ஷான், சஹான் ஆராச்சி, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, லஹிரு மதுஷங்க, ரமேஷ் மெண்டிஸ், துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, கசுன் ராஜித,ஜெஃப்ரி வான்டர்சே, மஹேஷ் தீக்ஷனா, பிரவீன் ஜெயவிக்ரம.
இலங்கை தற்காலிக டி20 அணி: தசுன் ஷனக (கே), தனுஷ்க குணதிலக, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, அஷேன் பண்டார, நிரோஷன் டிக்வெல்லா, துனித் வெல்லலகே, தனஞ்சய லக்ஷன், சஹான் ஆராச்சி, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, லஹிரு மதுஷங்க, ரமேஷ் மெண்டிஸ், துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, நுவான் துஷார, கசுன் ராஜித, நிபுன் மலிங்க, லஹிரு குமார, ஜெப்ரி வான்டர்சே, மஹேஷ் தீக்ஷனா, பிரவீன் ஜெயவிக்ரம, லக்ஷான் சண்டகன்
சுற்றுப்பயண அட்டவணை:
- ஜூன் 7: முதல் டி20, கொழும்பு
- ஜூன் 8: இரண்டாவது டி20, கொழும்பு
- ஜூன் 11: மூன்றாவது டி20, கண்டி
- ஜூன் 14: முதல் ஒருநாள் போட்டி, கண்டி
- ஜூன் 16: இரண்டாவது ஒருநாள் போட்டி, கண்டி
- ஜூன் 19: மூன்றாவது ஒருநாள் போட்டி, கொழும்பு
- ஜூன் 21: நான்காவது ஒருநாள் போட்டி, கொழும்பு
- ஜூன் 24: ஐந்தாவது ஒருநாள் போட்டி, கொழும்பு
- ஜூன் 29-ஜூலை 3: முதல் டெஸ்ட், காலே
- ஜூலை 8-12: இரண்டாவது டெஸ்ட், காலே