Australia vs India 4th T20I Match Prediction: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை மூன்று டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.

Advertisement

இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா 1-1 என தொடரை சமன் செய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

AUS vs IND 4th T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
  • இடம் - கராரா ஓவல் கிரிக்கெட் மைதானம், குயின்ஸ்லாந்து
  • நேரம் - மதியம் 1.45 மணி

Carrara Oval, Queensland Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 09 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 4 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 4 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 123 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 149 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது

AUS vs IND T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 35
  • இந்தியா- 21
  • ஆஸ்திரேலியா- 12
  • முடிவில்லை- 02
Advertisement

AUS vs IND 4th T20I : Where to Watch?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

AUS vs IND 4th T20I: Player to Watch Out For

Advertisement

இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நட்சத்திர வீரர்களாக இருக்கலாம், அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்காக மிட்செல் மார்ஷ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் பிரகாசிக்க முடியும்.

Australia vs India 4th T20I Probable Playing XI

Australia 4th T20I Probable Playing XI: மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சேவியர் பார்ட்லெட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னெமன்.

Advertisement

India 4th T20I Probable Playing XI: அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

Australia vs India Today's Match Prediction

ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் விளையாட மாட்டார் என்பதால், இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Also Read: LIVE Cricket Score
Advertisement

AUS vs IND 4th T20I Match Prediction, AUS vs IND Pitch Report, Today's Match AUS vs IND, AUS vs IND Prediction, AUS vs IND Predicted XIs, Cricket Tips, AUS vs IND Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs India

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News