ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து சீன் அபோட் விலகல்!
ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்சமயம் சீன் அபோட்டும் முதல் போட்டியில் இருந்து விலகி இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சீன் அபோட்டுக்கான மாற்று வீரர் யார் என்பதையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.