விளையாடிய மழை; கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா- இந்தியா போட்டி!

Updated: Sat, Nov 08 2025 19:58 IST
Image Source: Google

இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நான்கு டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பிரிஸ்பேனில் உள்ள த கபா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது,

இப்போட்டியில் டாஸை இழந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினர். இதன் மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். மேற்கொண்டு இந்திய அணி 4.5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்களைச் சேர்த்த நிலையில் இடி, மின்னல் காரணமாக ஆட்டம் பதியிலேயே நிறுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தொடர் மழையால் இப்போட்டி நடைபெறாத சூழல் நிலவியதையடுத்து, இப்போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. மேலும் இத்தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய அபிஷேக் சர்மா இத்தொடருக்கான ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

இந்திய பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ்(கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், ஜோஷ் பிலிப், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷூயிஸ், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை