SL vs SA 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Sep 06 2021 19:58 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இலங்கை வீழ்த்தி 1-1 என்ற கணக்கில் சமனிலை பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்புவிலுள்ள பிரமதசா மைதானத்தில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  •         மோதும் அணிகள் - இலங்கை vs தென் ஆப்பிரிக்க
  •         இடம் - பிரமதசா மைதானம், கொழும்பு
  •         நேரம் - பிற்பகல் 3 மணி

போட்டி முன்னோட்டம்

தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியை வென்றிருந்தாலும், இரண்டாவது போட்டியில் சொதப்பியது. அதேசமயம் மழை குறுக்கிட்டதாலும் இலங்கை அணியின் வெற்றி கேள்விக்குறியானது.

இலங்கை அணில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, சரித் அசலங்கா ஆகியோர் பேட்டிங்கில் அபாரமாக விளையாடியது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது. மேலும் பந்துவீச்சாளர்களும் தங்களது பணியை திறம்பட செய்துவருகின்றனர். இருப்பினும் அந்த அணி கூடுதல் முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே தொடரை வெல்ல முடியும். 

அதேசமயம் முதல் போட்டியில் நூழிலையில் தோல்வியைச் சந்தித்த தென் ஆப்பிரிக்க அணி, இரண்டாவது போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரில் தன்னைத் தக்கவைத்துக் கொண்டது. 

ஜேன்மேன் மாலன், ஐடன் மார்க்ரம், ரீசா ஹென்ரிக்ஸ், வென்டெட் டூசன் என அதிரடியான பேட்டிங் வரிசையையும், ஷம்ஸி, ரபாடா போன்ற அனுபவ பந்துவீச்சாளர்களும் இருப்பதால் நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணியே தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  •         மோதிய ஆட்டங்கள் - 79
  •         இலங்கை வெற்றி - 32
  •         தென் ஆப்பிரிக்க வெற்றி -45
  •         முடிவில்லை - 2

உத்தேச அணி
இலங்கை -
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுக, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா (கே), வாநிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, அகில தனஞ்சய, துஷ்மந்த சமீரா, பிரவின் ஜெயவிக்ரமா.

தென் ஆப்பிரிக்கா - ஜென்மேன் மாலன், ஐடன் மார்க்ரம், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான்டெர் டூசன், வியான் முல்டர், ஹென்ரிச் கிளாசென், ஆண்டிலே பெஹ்லுக்வயோ, கேசவ் மகராஜ் (கே),ஜார்ஜ் லிண்டே, தப்ரைஸ் ஷம்ஸி, ககிசோ ரபாடா.

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

ஃபேண்டஸி லெவன்

  •         விக்கெட் கீப்பர்கள் - மினோத் பானுகா
  •         பேட்ஸ்மேன்கள் - அவிஷ்கா ஃபெர்னாண்டோ, ஜென்மேன் மாலன், சரித் ஹசலங்கா, ஐடன் மார்க்ரம்
  •         ஆல் -ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்கா, தனஞ்செய டி சில்வா
  •         பந்து வீச்சாளர்கள் - சாமிகா கருணரத்னே, கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்ஸி, ககிசோ ரபாடா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை