
டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தயாராகிவருவதை போல பாகிஸ்தானும் தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பை தொடர், பாகிஸ்தான் சொந்த மைதானங்களாக கொண்டு ஆடும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால், அந்த கண்டிஷனுக்கு நன்கு பழக்கப்பட்ட பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
அதற்கு முன்பாக, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்று 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி ஆடுகிறது. இத்தொடர் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று பிற்பகல் டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. பாபர் அசாம் தலைமையிலான டி20 உலக கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒருசில மணி நேரங்களில் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.