மகளிர் ஆசிய கோப்பை: மைதானத்தில் குத்தாட்டம் போட்ட இலங்கை வீராங்கனைகள் - வைரல் காணொளி!

Updated: Fri, Oct 14 2022 11:11 IST
Sri Lanka Women's Team Celebrates Semi Final Win Over Pakistan In Style (Image Source: Google)

மகளிர் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மாதவி அதிகபட்சமாக 35 ரன்னும், அனுஷ்கா சஞ்சீவனி 26 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் பிஸ்மா மரூப் மட்டும் தாக்குப் பிடித்து 42 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

 

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இலங்கை அணி வீராங்கனைகள் மைதானத்தில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த காணொளியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், ரசிகர்களையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை