மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!

Updated: Fri, Sep 20 2024 22:00 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, வங்கதேசம், ஸ்காட்லாந்து மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி சமாரி அத்தபத்து தலைமையிலான இந்த இலங்கை அணியில், ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இனோகா ரணவீர இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இலங்கை மகளிர் அணி: சாமரி அதபத்து (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவனி, ஹர்ஷிதா மாதவி, நிலக்ஷிகா டி சில்வா, இனோகா ரணவீர, ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, சச்சினி நிசன்சலா, விஷ்மி குணரத்ன, உதேஷிகா பிரபோதனி, அச்சினி குலசூரிய, சுகந்திகா குமாரி, இனோஷி பிரியதர்ஷனி, ஷஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா.

Also Read: Funding To Save Test Cricket

ரிசர்வ் வீராங்கனை: கௌஷினி நுத்யங்கனா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை