SL vs AUS, 3rd T20I: தசுன் ஷானகா அதிரடியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!

Updated: Sat, Jun 11 2022 22:37 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவரும் நிலையில், முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் சேர்ந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஃபின்ச்20 பந்தில் 29 ரன்களும், வார்னர் 33 பந்தில் 39 ரன்களும் அடித்தனர். மேக்ஸ்வெல் 16 ரன்னிலும் ஜோஷ் இங்லிஸ் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். 

ஸ்மித்தும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ஸ்மித் 27 பந்தில் 37 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 23 பந்தில் 38 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 175 ரன்களை குவித்து, 176 ரன்கள் என்ற சவாலான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தனுஷ்கா குணத்திலகா 15, பதும் நிஷங்கா 27, சரித் அசலங்கா 26, பனுகா ராஜபக்க்ஷ 17, குசால் மெண்டிஸ் 6 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

பின்னர் களமிறங்கிய இலங்கை கேப்டன் தசுன் ஷானகா அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆனாலும் கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றிபெற 19 ரன்களை சேர்க்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

கேன் ரிச்சர்ட்சன் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட தசுன் ஷானகா அடுத்தடுத்து இரண்டு பவுண்டர், ஒருசிக்சர் என விளாசி அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிபெறச் செய்தார்.

இதன்மூலம் 19.5 ஓவர்களில் இலங்கை அணி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியசாத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷானகா 54 ரன்களைச் சேர்த்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை