டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12-ல் நுழைந்தது நமீபியா!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய அந்த அணியில் தொடக்க வீரர்கள் கெவின் ஓ பிரையன் 25, பால் ஸ்டிர்லிங் 38, பால்பிர்னி 21 ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியெறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை 125 ரன்களை சேர்த்தது. நமீபியா அணி தரப்பில் ஜான் ஃபிரைலிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய நமீபியா அணியில் கிரேக் வில்லியம்ஸ் 15 ரன்னிலும், ஸேன் கிரீன் 24 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த் கேப்டன் எரஸ்மஸ் - டேவிட் வைஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதில் எரஸ்மஸ் அரைசதம் கடந்தார்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
இதன்மூலம் 18.3 ஓவர்களிலேயே நமீபியா அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நமீபியா அணி முதல் முறையாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப் பெற்றது.