ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் க்ரூப் பி பிரிவில் இடம்பிடித்திருந்த நமீபியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக கலீத் கைல் 34 ரன்களைச் சேர்த்தார். நமீபியா அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரூபன் டிரம்பெல்மேன் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வைஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணியிலும் மைக்கேல் வான் லிங்கன் ரன்கள் ஏதுமின்றியும், நிக்கோலஸ் டேவின் 24 ரன்களிலும், எராஸ்மஸ் 13 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அதேசமயம் அணியின் நம்பிக்கையாக இருந்த ஜான் ஃபிரைலிங் 25 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நமீபியா அணி 109 ரன்களைச் சேர்த்து போட்டியை சமன்செய்தது.  இதன்மூலம் இப்போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது.

இதையடுத்து ஓமன் அணி தரப்பில் சூப்பர் ஓவரை பிலால் கான் வீச, அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் டேவிட் வைஸ் பவுண்டரி சிக்ஸரை பறக்கவிட்டதுடன் 4 பந்துகளில் 13 ரன்களைச் சேர்க்க, அதன்பின் கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட எராஸ்மஸும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி 8 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நமீபியா அணி சூப்பர் ஓவரில் 21 ரன்களைச் சேர்த்தது.

 

இதையடுத்து சூப்பர் ஓவரில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஓமன் அணி டேவிட் வைஸ் வீசிய அந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்ததுடன் மொத்தமாகவே 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் நமீபியா அணி சூப்பர் ஓவரில் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியின் சூப்பர் ஓவருக்கான காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News