டி20 உலகக்கோப்பை: ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவதில் சந்தேகம்!

Updated: Thu, Oct 20 2022 11:31 IST
T20 World Cup: Smith Likely To Miss Opener Match Against New Zealand, Indicates Bailey (Image Source: Google)

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், ஜீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் பெர்த்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. 

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. 

இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், “இந்த உலகக் கோப்பையில் அணியில் உள்ள 15 பேரும் பங்களிக்கவுள்ளார்கள். ஆனால் முதல் ஆட்டத்தில் விளையாடும் 11 பேரில் ஸ்டீவ் ஸ்மித்தும் இருப்பார் என நான் நினைக்கவில்லை. ஆனால் அடுத்து வரும் ஆட்டங்களில் அவருடைய பங்களிப்பு அணிக்கு உதவும். டேவிட் வார்னர் முதல் ஆட்டத்தில் விளையாடுவார்”என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை