ஸ்டீவ் ஸ்மித்தை க்ளீன் போல்டாக்கிய அல்ஸாரி ஜோசப் - காணொளி
Alzarri Joseph Video: ஜமைக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் க்ளீன் போல்டாக்கி அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 143 ரன்களில் ஆல் அவுட்டானது.
அதன்பின் 80 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேமரூன் க்ரீன் 42 ரன்களுடனும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியில் அல்ஸாரி ஜோசபின் பந்துவீச்சு குறித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 9அவது ஓவரை அல்ஸாரி ஜோசப் வீசிய நிலையில், அந்த ஓவரை ஸ்டீவ் ஸ்மித் எதிர்கொண்டார். ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் ஸ்மித்தை ஒரு ரன் கூட எடுக்க விடாமல் அல்ஸாரி ஜோசப் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அதன்பின் ஓவரின் கடைசி பந்தை ஜோசப் ஆஃப் ஸ்டம்பை நோக்கி வீசினார்.
அப்போது அந்த பந்தை ஸ்மித் தடுத்து விளையாட முயற்சித்த நிலையில், அதனை தவறவிட்டார். இதனால் அந்த பந்து ஸ்டம்புகளை தக்கியது. இதன் காரணமாக இப்போட்டியில் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இந்நிலையில் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: மிக்கைல் லூயிஸ், ஜான் கேம்பல், கெவ்லான் ஆண்டர்சன், பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜோமல் வாரிக்கன், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்
Also Read: LIVE Cricket Score
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: சாம் கொன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட்