அனைத்து வகையிலான கிரிக்கெட்டிற்கும் விடைகொடுத்த ஹர்பஜன் சிங்!

Updated: Fri, Dec 24 2021 15:05 IST
Image Source: Google

இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்த ஹர்பஜன் சிங், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.

இந்த நிலையில் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளளார். 41 வயதாகும் ஹர்பஜன் சிங் 1998ஆம் அண்டு மார்ச் 25 ஆம் தேதி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

 

1998ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 2015ஆம் ஆண்டு வரை விளையாடினர். 2006 முதல் 2016 வரை டி20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

 

ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டும், 236 ஒருநாள் போட்டியில் விளையாடி 269 விக்கெட்டும், 28 டி20 போட்டியில் விளையாடி 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 

இதையடுத்து சக வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என ஹர்பஜன் சிங்கிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை