சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமளிக்கிறது - ஹர்பஜன் சிங்!

Updated: Tue, Jun 17 2025 15:06 IST
Image Source: Google

ENG vs IND Test Series: உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த கருண் நாயரிடமிருந்து சர்ஃபராஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தினார்.

இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், கருண் நாயர் மற்றும் ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள்து.

அதேநேரத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்ஸர் படேல், ஹர்ஷித் ரானா, சர்ஃப்ராஸ் கான் உள்ளிட்டோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சர்ஃப்ராஸ் மற்றும் ஹர்ஷித் ரானா இருவரும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டனர். இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் சர்ஃப்ராஸ் கான் அபாரமாக செயல்பட்டு ரன்களைக் குவித்தார். 

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அணியில் அவரது பெயர் இல்லாதது எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. அவர் மீண்டும் வலுவாக திரும்புவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கு மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. அதனால் ஏமாற்றமடைய வேண்டாம்.

 இன்று இல்லையென்றால் நாளை உங்களுக்கு உரிய தகுதி கிடைக்கும். கருண் நாயரைப் பாருங்கள். இங்கிலாந்துக்கு எதிராக அவர் 300 ரன்கள் எடுத்தார், பின்னர் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்போது அவர் கடுமையக உழைத்து இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்குத் திரும்பிவிட்டார். அவரைப் பின்பற்றி நீங்களும் கடுமையாக உழைத்தல் நிச்சயம் உங்களுக்கான இடம் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்காக கடந்தாண்டு அறிமுகமான சர்ஃப்ராஸ் கான் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் ஒரு சதத்துடன் 371 ரன்களைக் குவித்துள்ளார். மேற்கொண்டு அவர் சமீபத்தில் இந்திய ஏ- இந்தியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் 76 பந்துகளில் 101 ரன்களைக் குவித்து அசத்தி இருந்தார். இருப்பினும் அவர் இந்திய அணியின் கூடுதல் வீரர் பட்டியலில் கூட இல்லாதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை