ஐபிஎல் 2025: ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த சுனில் நரைன்!

Updated: Sat, Apr 12 2025 13:20 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்காத்தா ஐட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளிததனர். இதில் அதிகபட்சமாக ஷிவம் தூபே 31 ரன்களையும், விஜய் சங்கர் 29 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குயின்டன் டி காக் 23 ரன்களிலும், சுனில் நரைன் 44 ரன்களிலும் விகெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் அஜிங்கியா ரஹானே 20 ரன்களையும், ரிங்கு சிங்15 ரன்களையும் சேர்த்க்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இப்போட்டியில் பேட்டிங்கில் 44 ரன்களையும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய சுனில் நரைன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூல் ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங்கின் சிறந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். அந்தவகையில் ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்கு எதிராக சுழற்பந்து வீச்சாளராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை சுனில் நரைன் பெற்றுள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது சுனில் நரைன் அவரது சாதனைய முறியடித்து அசத்தியுள்ளார். அந்தவகையில் சுனில் நரைன் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 26 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார். அதேசமயம் ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் இலங்கையில் லசித் மலிங்கா 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை