தோனி கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து டூ பிளெசிஸ் கருத்து!

Updated: Fri, Mar 25 2022 19:25 IST
Image Source: Google

சென்னை சூப்பர் கிங்ஸ் குடும்பத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தவர் தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டூப்ளசிஸ். கடந்த சில ஆண்டுகளாக தோனிக்கு கீழ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர், இந்தாண்டு தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மெகா ஏலத்தில் அவரை ஏலம் எடுக்க, ரசிகர்கள் பல முறை கோரியும், பட்ஜெட் காரணமாக வாங்காமல் விட்டுவிட்டது. இதனையடுத்து தற்போது அவர் ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டு, கேப்டனாகவும் பதவியேற்றுள்ளார். ஒருபுறம் டூப்ளசிஸின் கேப்டன்சியில் கோலி, மற்றொரு புறம் ஜடேஜாவின் கேப்டன்சியில் தோனி என்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தோனியின் கேப்டன்சி குறித்து டூ பிளசிஸ் பேசியுள்ளார். அதில், “பல சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளேன் என்ற பெருமை என்னிடம் உள்ளது. கிரீம் ஸ்மித்திற்கு கீழ் முதலில் விளையாடினேன். அதன்பின்னர் சென்னை வந்த பின்னர், தோனிக்கு கீழ் விளையாட தொடங்கினேன். அவரின் கேப்டன்சியில் நீண்ட காலம் விளையாடியது எனது அதிர்ஷ்டம்.

களத்தில் தோனி முடிவு எடுக்கும் போதெல்லாம், அவரின் மூளை எப்படி செயல்படுகிறது என மிக அருகில் இருந்து பார்த்தவன் நான். என்னுடைய கிரிக்கெட் வாழ்கைக்கு அது மிக முக்கியமான ஒன்று. ஒவ்வொரு கேப்டனுக்கும் தனித் தனி பலம் உண்டு. எனினும் மற்ற சிறந்த தலைவர்களின் வழிகளையும் நான் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்தவகையில் தோனி எனக்கு முக்கியம் தான்” எனக்கூறியுள்ளார்.

விராட் கோலியின் கேப்டன்சியில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி, டூ பிளசிஸை கேப்டனாக நியமிக்க முக்கிய காரணம், அவருக்கு தோனியின் வியூகங்கள் தெரியும் என்பதால் தான். இக்கட்டான சூழல்களில் சரியான முடிவுகளை எடுப்பதை தோனியிடம் இருந்து அறிந்து வைத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை