தற்போது உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் பாண்டியா தான் - வாசிம் அக்ரம்

Updated: Mon, Aug 29 2022 22:27 IST
Image Source: Google

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கடந்த ஆண்டு ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. 

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியா 17 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 33 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அதேபோன்று பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாண்டியா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினையும் பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இந்திய அணியை சேர்ந்த ஹர்திக் பாண்டியா தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இதே போல் நிலையான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தினால் நிச்சயம் உலகின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டாக அவர் மாறுவார். தற்போது உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் பாண்டியா தான் என்று நான் கருதுகிறேன். 

ஏனெனில் அவர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவதோடு அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இடம் பெற்று விளையாடி வருகிறார். அதுமட்டும் இன்றி பேட்டிங்கிலும் மிகச் சிறப்பாக அவர் விளையாடி வருவதால் நிச்சயம் அவரே உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என தான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை