வெஸ்ட் இண்டீஸ் வீரர்காள் தங்கள் அணிக்காக விளையாடுவதில்லை - சந்தர்பால் குற்றச்சாட்டு!

Updated: Tue, Nov 15 2022 11:54 IST
“We played for more than just money”: Shivnarine Chanderpaul (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்திடம் அதிர்ச்சிகரமான தோல்விகளுக்குப் பிறகு, முதல் சுற்றுடன் வெளியேறியது உலக கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் இருந்த பட்சத்திலும் அந்த அணியால் வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்கள் அணிக்காக விளையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்று முன்னாள் வீரர் சந்தர்பால் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,"நாங்கள் அனைவரும் பணத்திற்காக விளையாடினோம், நாங்கள் பெருமைக்காக விளையாடினோம். தற்போது உலகம் முழுவதும் சமீபத்திய டி20 தொடர்களின் எழுச்சியின் காரணத்தால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்கள் அணிக்காக விளையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

அவர்கள் வேறு இடத்திற்கு சென்று விளையாடலாம் என்பதால் வீரர்களின் கவனம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதில் இல்லை. எது வந்தாலும், தங்கள் கிரிக்கெட் வாழ்க்கை நீடிக்கும் வரை தங்களால் முடிந்த அளவு சம்பாதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

சந்தர்பாலின் மகன் தாகெனரின், அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை