வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Jul 21 2022 14:32 IST
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் துவங்க உள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது டெஸ்ட் தொடரை சமன் செய்த வேளையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி தற்போது மாபெரும் வெற்றியுடன் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
  • இடம் - குயின்ஸ் பார்க் மைதானம், டிரினிடாட்
  • நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா என முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் கெய்க்வாட், ஹூடா, இஷான் கிஷான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சஹால், அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் ஜடேஜா, சிராஜ் ஆகியோரும் இருப்பது கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. 

அதேசமயம் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் வங்கதேசம் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் படுதோல்வியை இழந்தது. இதனால் இத்தொடரில் மீண்டும் தங்கள் அணியை வலுப்படுத்த வேண்டியா கட்டாயத்தில் உள்ளது.

அணியில் ஷாய் ஹோப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸுடன் அணுபவ ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பந்துவீச்சில் ரோவ்மன் பாவல், அகீல் ஹொசைன், கீமா பால், அல்ஸாரி ஜோசப் இருப்பது அணிக்கு நம்பிக்கையை கூட்டுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 136
  • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 63
  • இந்தியா வெற்றி - 67
  • டிரா - 2
  • முடிவில்லை - 4

உத்தேச அணி

வெஸ்ட் இண்டீஸ் - நிக்கோலஸ் பூரன் (கே), ஷாய் ஹோப், ஷமர் ப்ரூக்ஸ், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஹோல்டர், குடாகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசப், அகேல் ஹொசைன், கீமோ பால், ரோவ்மேன் பவல்

இந்தியா - ஷிகர் தவான் (கே), இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ்/சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், சிராஜ், சாஹல், அர்ஷ்தீப் சிங்.

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - இஷான் கிஷன், நிக்கோலஸ் பூரன்
  •      பேட்டர்ஸ் - ஷிகர் தவான், தீபக் ஹூடா, ஷாய் ஹோப்
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், ரவீந்திர ஜடேஜா
  •      பந்துவீச்சாளர்கள் - அவேஷ் கான், சாஹல், அர்ஷ்தீப் சிங், அல்ஸாரி ஜோசப்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை