வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து, டி20 உலகக்கோப்பை, ரவுண்ட் 1 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Oct 17 2022 06:33 IST
Image Source: Google

எட்டாவது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று (16ஆம் தேதி) கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல 16 அணிகள் கலந்துகொண்டு மோத உள்ளன. ஐசிசி தரவரிசை பட்டியலில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

இந்த 8 அணிகளும் 22ஆம் தேதி தொடங்கும் சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கான அணிகள் முதல் சுற்று ஆட்டங்களில் இருந்து தேர்வாகும். இந்த முதல் சுற்று ஆட்டங்கள் ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் சுற்றில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ், 2014ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் கலந்துகொள்கின்றன. 

அதன்படி தொடரின் இரண்டாம் நாளான நாளை ஹாபர்ட்டில் நடைபெறும் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இதற்கு முன்னதாக இருமுறை டி20 உலகக்கோப்பை தொடரில் வெற்றிபெற்ற வலுவான அணிகளில் ஒன்றாக இருந்தாலும், சமீப காலமாக அந்த அணியின் வெற்றி சதவிகிதம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. 

அதிலும் கைல் மேயர்ஸ், எவின் லூயிஸ், ரோவ்மன் பாவெல், ஜேசன் ஹோல்டர் என டி20 நட்சத்திர வீரர்கள் அணியில் இருக்கும் பட்சத்திலும் அந்த அணி டி20 போட்டிகளில் சொதப்பி வருவது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. அதனால் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தங்கள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ரிச்சர்ட் பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி சமீப காலமாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ், மேத்யூ கிராஸ், காலம் மெக்லீட், மார்க் வாட் என அதிரடி வீரர்கள் இருப்பதால் நிச்சயம் இந்த தொடரில் ஸ்காட்லாந்து அணி தங்கள் திறனை நிரூபிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இரு அணிகளும் இதுவரை இரு அணிகளும் மோதியது இல்லை என்பதால் இப்போட்டியில் மீது எதிர்பார்ப்புகள் உள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து
  • இடம்- பெல்லரிவ் ஓவல், ஹாபர்ட்
  • நேரம் - காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)

போட்டியைக் காணும் வழிமுறை

உலகக்கோப்பை போட்டிகள் அனைத்தும் டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வாயிலாகவும் போட்டியை இந்திய ரசிகர்கள் காணலாம்.

உத்தேச லெவன்

வெஸ்ட் இண்டீஸ்: கைல் மேயர்ஸ், எவின் லூயிஸ், பிராண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன் (கே), ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ஒடியன் ஸ்மித், அகில் ஹொசைன், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்.

ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ், மேத்யூ கிராஸ், ரிச்சர்ட் பெரிங்டன் (கே), கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், மார்க் வாட், கிறிஸ் க்ரீவ்ஸ், பிராட்லி வீல், ஜோஷ் டேவி, கிறிஸ் சோல்.

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
  •      பேட்டர்ஸ் - எவின் லூயிஸ், பிராண்டன் கிங், ரிச்சர்ட் பெரிங்டன், ஜார்ஜ் முன்சி
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ்
  •      பந்துவீச்சாளர்கள் - மார்க் வாட், ஜோஷ் டேவி, அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை