ரவீந்திர ஜடேஜா இடம்பெறாததற்கான காரணத்தை விளக்கிய பிசிசிஐ!

Updated: Wed, Jul 27 2022 21:45 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

குவின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. ஆவேஸ் கான் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரசீத் கிருஷ்ணா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டிகளில் விளையாடாத அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கு இந்த போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதே வேளையில், மூன்றாவது போட்டிக்கான விண்டீஸ் அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. அல்ஜாரி ஜோசப், ரோவ்மன், செப்பர்ட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர், கீமோ பவுல் மற்றும் கார்டி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டியில் விளையாடாத ரவீந்திர ஜடேஜா, மூன்றாவது போட்டியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியிலும் ஜடேஜா இடம்பெறாததற்கான காரணத்தை பிசிசிஐ, வெளியிட்டுள்ளது.

இது குறித்து பிசிசிஐ, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ரவீந்திர ஜடேஜா 100% உடற்தகுதியை பெறாததால், அவர் ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. ரவீந்திர ஜடேஜாவை மருத்துவ குழுவினர் கண்கானித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை