புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பெங்களூரு, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அதற்கடுத்த போட்டிகள் புனேவிலும் நடக்கின்றன.
இந்த சீசனில் டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ், புனேரி பல்தான் அணிகள் சிறப்பாக ஆடிவருகின்றன.
இன்று பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில் தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இரண்டுமே வலுவான அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருந்தது.
இரு அணிகளுமே அதிகமாக புள்ளிகளை பெற்றன. கடைசியில் பெங்களூரு புல்ஸ் அணி 47-43 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
இந்த போட்டியில் தோற்ற டபாங் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது. புனேரி பல்தான் 3ஆம் இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 4ஆம் இடத்திலும் உள்ளன.