19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆடவர் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் எந்த அணி வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட்(கே), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அர்ஷ்தீப் சிங், ராகுல் திரிபாதி, அவேஷ் கான், முகேஷ் குமார், பிரப்சிம்ரன் சிங், ஆகாஷ் தீப்.
ஆஃப்கானிஸ்தான் அணி: செதிகுல்லா அடல், முகமது ஷாஸாத், நூர் அலி ஸத்ரான், ஷாஹிதுல்லா கமால், அப்சர் ஸசாய், கரீம் ஜனத், குல்பாதின் நைப்(கே), ஷரபுதீன் அஷ்ரஃப், கைஸ் அகமது, ஃபரீத் அஹ்மத் மாலிக், ஜாஹிர் கான், சயீத் ஷிர்சாத், நியாத் ஷிர்சாத், சுபைத் அக்பரி, வஃபியுல்லாஹ் தாரகில்.