பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டின் செய்ய அழைத்துள்ளது.
இப்போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினமே இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்திருந்தன. இதில் பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரர் காம்ரன் குலாமிற்கு லெவனில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணியைப் பெறுத்தவரையில் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் மற்று கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: மேத்யூ ஷார்ட், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஆரோன் ஹார்டி, கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: அப்துல்லா ஷஃபீக், சைம் அயூப், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன்), காம்ரன் குலம், சல்மான் அலி ஆஹா, முகமது இர்பான் கான், ஷாகின் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராவுஃப், முகமது ஹஸ்னைன்.