WI vs PAK: வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி அறிவிப்பு; அல்ஸாரி ஜோசபிற்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும், துணைக்கேப்டனாக பிராண்டன் கிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

West Indies ODI Squad: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ள நிலையில், நட்சத்திர் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசபிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி தற்பொது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 ம்ற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதில் ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஒருநாள் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் தொடரும் நிலையில் சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், ஷாஹீன் ஷா அஃப்ரிடி உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்த ஃபகர் ஸமான் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் கேப்டனாக ஷாய் ஹோப் தொடரும் நிலையில் பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், ஷமார் ஜோசப் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் அல்ஸாரி ஜோசபுக்கு தொடர் பணிச்சுமை காரணமாக இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகவும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ஜெடியா பிளேட்ஸ், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு, ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட்.
பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், ஃபஹீம் அஷ்ரஃப்,ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், நசீம் ஷா, சைம் அயூப், ஷஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் சுஃபியான் முகிம்
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் ஒருநாள் தொடர் அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 8, டிரினிடாட் & டொபாகோ
- இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 10, டிரினிடாட் & டொபாகோ
- மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 12, டிரினிடாட் & டொபாகோ
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now