கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம்.

இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 6, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஷாய் ஹோப் தொடரும் நிலையில், அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசபிற்கு பணிச்சுமைக் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரொமாரியோ செஃபெர்ட் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2. ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளாது. இதனையடுத்து அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் பென் லிஸ்டர் நியூசிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
3. இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி வீரர்கள் ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், பிரஷித் கிருஷ்ணா உள்ளிட்டோரும், இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், கஸ் அட்கின்சன் உள்ளிட்டோரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
4. தி ஹண்ட்ரட் தொடரின் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிக்காக சிறப்பாக பந்துவீசியதுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் இந்த போட்டியில் ரஷித் காஅன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 650 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ததுடன், இந்த மைல் கல்லை எட்டிய உலகின் முதல் வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
5. தி ஹண்ட்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் சதர்ன் பிரேவ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் அணி நிர்ணயிக்கப்பட்ட பந்துகளின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சதர்ன் பிரேவ் அணி 89 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now