
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில் ஆடவருக்கான பரிந்துரை பட்டியலில் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் வியான் முல்டர், இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது பெயர்கள் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் வியான் முல்டர் ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முற்சதம் விளாசியதுடன் 367 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதுதவிர்த்து இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ஷுப்மன் கில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு ரன்களக் குவித்ததன் காரணமாக அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸும் இந்தியா டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டதுடன் அணியின் வெற்றியிலும் பங்காற்றியதன் காரணமாக அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.