தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தாக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மேத்யூ பிரிட்ஸ்கீ வாய்ப்பு பெற்றுள்ளார். அதேசமயம் வங்கதேச அணி தரப்பில் நயீம் ஹசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய கையோடும், வங்கதேச அணியானது இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த கையுடனும் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
வங்கதேச பிளேயிங் லெவன்: ஷத்மான் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கே), மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், ஜகர் அலி, நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத்
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டோனி டி ஸோர்ஸி, ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், ரியான் ரிக்கல்டன், மேத்யூ பிரிட்ஸ்கீ, கைல் வெர்ரைன், வியான் முல்டர், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, டேன் பீட்.