
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுஇந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா மீண்டும் லெவனில் இடம்பிடித்துள்ள நிலையில், நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கெல்டன், டெம்பா பவுமா(கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே