ஆசிய கோப்பை டி20: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்
ஆசிய கோப்பை டி20 தொடரில் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் தேதி முதல் டி20 ஆசிய கோப்பை நடத்தப்படவுள்ளது. இதில் இந்தியா உட்பட மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த 5 வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
5. இப்ராஹிம் சத்ரான்
ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் இப்ராஹிம் சத்ரான் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார், அவர் டி20 ஆசிய கோப்பையில் 5 போட்டிகளில் விளையாடி 65.33 சராசரியாக 196 ரன்கள் எடுத்தார். 23 வயதான இப்ராஹிம் ஆசிய கோப்பை டி20 தொடரில் ஒரு அரைசதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. பாபர் ஹயாத்
இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நான்காவது பெயர் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் ஹாங்காங் வீரர் பாபர் ஹயாத் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த 33 வயதான வீரர், ஆசிய கோப்பை டி20 தொடரில் ஐந்து போட்டிகளில் 235 ரன்கள் எடுத்துள்ளார். அவரது, சராசரி 47 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 146.87ஆக உள்ளது. இது மட்டுமல்லாமல், அவர் ஒரு சதம் மற்றும் அரைசதத்தையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. ரோஹித் சர்மா
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடிப்பவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோஹித் சர்மா. ஆசிய கோப்பை டி20 தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30.11 சராசரியாகவும் 141.14 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 271 ரன்கள் எடுத்தார். இதில் அவர் இரண்டு அரைசதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. முகமது ரிஸ்வான்
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பாகிஸ்தான் வீரர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் மட்டுமே. இந்த சிறப்புப் பட்டியலில் அவர் 6 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 56.20 சராசரியுடன் 281 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
1. விராட் கோலி
Also Read: LIVE Cricket Score
இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி, ஆசிய கோப்பை டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த சாதனையைப் படைத்துள்ளார், அவர் 10 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 85.80 சராசரியுடன் 429 ரன்கள் எடுத்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதில் அவர் 1 சதம் மற்றும் 3 அரைசதங்களை அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now