
இந்தியாவின் பாரம்பாரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிவரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தமிழ்நாட்டில் இருந்து டிஎன்சிஏ பிரெசிடென்ட்ஸ் லெவன் மற்றும் டிஎன்சிஏ லெவன் அணிகள் பங்கேற்கிறது.
இதுதவிர்த்து ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மிர், ஒடிசா, பரோடா, மஹாராஷ்டிரா, மும்பை, ஹரியானா, பெங்கால், ஹைதராபாத், பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 16 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த தொடரில் பங்கேற்கவுள்ளன. இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறா இருக்கும் நிலையில் இறுதிப்போட்டியானது செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் மஹாராஷ்டிரா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கித் பாவ்னே தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா, முகேஷ் சௌத்ரி, ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் மற்றும் அர்ஷின் குல்கர்னி உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர்.