
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 14, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் மேத்யூ ஷார்ட், லான்ஸ் மோரிஸ் ஆகியோர் காயம் காரணமாக, மிட்செல் ஓவன் கன்கஷன் காரணமாகவும் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனையடுத்து ஆரோன் ஹார்டி மற்றும் மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் சேர்க்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
2. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சானியா சந்தோக்கிற்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.