
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி தங்கள் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் வங்கதேச அணி கடுமையாக போராடிய நிலையிலும் இந்திய அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியில் விளையாடுகிறது. மேலும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இப்போட்டி முக்கியமானது என்பதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: வில் யங், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே
வங்கதேசம் பிளேயிங் லெவன்: தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தஃபிசூர் ரஹ்மான்