
Wasim Akram: பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் சமீபத்தில் ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன் 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. மேலும் இத்தொடரின் கடைசி போட்டியில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதையும், இந்தியாவின் ஷுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் தொடர் நாயகன் விருதுகளையும் வென்றனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர்த்து, முகமது சிராஜை தற்போதைய இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று அவர் வர்ணித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பையில் முகமது சிராஜ் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.