
நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதனத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டான நிலையில், அடுத்து விளையாடியா நியூசிலாந்து அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 601 ரன்களைக் குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் டெவான் கான்வே 153 ரன்களையும், ஹென்றி நிக்கோலஸ் 150 ரன்களையும், ரச்சின் ரவீந்திர 165 ரன்களையும் சேர்த்தன்ர்.
பின் 476 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜிம்பாப்வே அணி மீண்டும் பேட்டிங்கில் சோபிக்க தவறியதுடன் 117 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸகாரி ஃபால்க்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மாட் ஹென்றி மற்றும் ஜேக்கோப் டஃபி தலா இரண்டு விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.