
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே நீக்கப்பட்டு டேரில் மிட்செல் லெவனில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய அணியில் ஹர்ஷித் ரானாவுக்கு பதிலாக வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க்