
Glenn Maxwell Amazing Catch to Dismiss Ryan Rickelton: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பவுண்டாரி எல்லையில் பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டிம் டேவிட்டின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகப்சட்சமாக டிம் டேவிட் 4 பவுண்டரி, 8 சிக்ஸர் என 83 ரன்களைக் குவித்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் குவெனா மபாகா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கல்டான் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 71 ரன்கள் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட், பென் துவார்ஷூயிஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.