
AUS vs SA 1st T20I: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் 71 ரன்களைச் சேர்த்து வெற்றிக்காக போராடிய நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர்.
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று டார்வினில் நடைபேற்றது. இந்த போட்டியில் டாஸை வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டிராவிஸ் ஹெட், கேப்டன் மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்கிலிஸ் உள்ளிட்டோர் பெரிதாளவில் ரன்களைச் சேர்க்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கிரீன் 13 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, டிம் டேவிட் 29 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய மிட்செல் ஓவன், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோரும் சோபிக்க தவற டிம் டேவிட்டும் 4 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 83 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.