
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் காயம் காரணமாக ஃபகர் ஸமான் விளையாடாத நிலையில் இமாம் உல் ஹக்கிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இப்போட்டிக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த வித மாற்றமும் இன்றி கடந்த போட்டியில் விளையாடிய வீரர்கள் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.
இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது வங்கதேசத்திற்கு எதிரான வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் அரையிறுதிக்கு முன்னாறுவதற்கு இப்போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Pakistan Playing XI: இமாம் உல் ஹக், பாபர் ஆசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்), ஆகா சல்மான், தையாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது.
India Playing XI: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி.