
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் நட்சத்திர வீரர்கள் ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மஹாராஜ் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கவில்லை. மறுபக்கம் ஆஃப்கானிஸ்தான் அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள இப்ராஹிம் ஸத்ரானுடன், இளம் அதிரடி வீரரான செதிகுல்லா அடலிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வியைத் தழுவிய கையோடு இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஆஃப்கானிஸ்தான் அணியானது சமீப காலங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆஃப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), அஸ்மதுல்லா ஒமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நூர் அஹ்மத்.
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கல்டன், டோனி டி ஸோர்ஸி, டெம்பா பவுமா(கே), ரஸ்ஸி வான்டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி