இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவேற்றியைப் பதிவுசெய்த 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு, கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் பென்னி துவர்ஷியஸ் அறிமுக வீரராக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ்(கே), ஸ்டீவன் ஸ்மித், கேமரூன் கிரீன், மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி, மேத்யூ ஷார்ட், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், பென் துவர்ஷியஸ், ஆடம் ஸாம்பா
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஹாரி புரூக்(கே), ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித்.