
Ricky Ponting All Time Top-5 Test Batters: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங் தனக்குப் பிடித்தமான ஆல் டைம் சிறந்த 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்து 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. மேலும் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் தொடர்நாயகன் விருதை வென்றானர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தனது ஆல் டைம் சிறந்த ஐந்து டெஸ்ட் பேட்டர்களைத் தேர்வு செய்துள்ளார். அவர் முதலில் வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாராவைத் தேர்வு செய்துள்ளார். பிரையன் லாரா 131 டெச்ட் போட்டிகளில் விளையாடி 11,953 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த பேட்டர் எனும் சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோரானது 400 ரன்களாக உள்ளது.